உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 66 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
#Unlock1 See who decides to take a bus ride along with other passengers in #Kolkata. Some #monkey business this! @susantananda3 @SudhaRamenIFS @drqayumiitk @ParveenKaswan @rameshpandeyifs pic.twitter.com/sYPzIv3Mvt
— Sourav Sanyal (@SSanyal) June 2, 2020
இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்துள்ள நிலையில், 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. பல மாநிலங்களில் பேருந்து போக்குவரத்து இரண்டு மாதத்துக்கு பிறகு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் சில தினங்களாக பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியோடு பொதுமக்கள் பேருந்துகளில் பயணித்து வரும் இந்த நேரத்தில், பேருந்தில் குரங்கு ஒன்று மக்களோடு மக்களாக எவ்வித சேட்டையும் செய்யாமல் தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.