![bjp mla](http://image.nakkheeran.in/cdn/farfuture/STWVDeWC4nFcIdAqJDiG1FWPetJwj3MpJe751rMZNwA/1535299934/sites/default/files/inline-images/SDSADS.jpg)
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை சரியாகிவரும் சூழலில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான் கேரளாவிற்கு வெள்ளம் வந்தது என சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.எல்.ஏவுமான பசன்கவுடா பட்டில்யட்னால், இந்து மதத்தின் உணவர்வுகளை பாதிக்கும்படி நடந்துகொண்டால் மதமும் தண்டிக்கும், இயற்கையும் தண்டிக்கும் என குறிப்பிட்ட அவர் உதாரணமாக கேரளா எடுத்துக்கொள்ளுங்கள் அங்கு இருப்பவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நேரடியாக ஆதரித்தனர். போன வருடம் இதே நேரம் அங்கு மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது ஆனால் தற்போது அதேநாளில் இன்று கேரளாவின் நிலையை பாருங்கள் என சர்சைக்குரியவகையில் பேசியுள்ளார்.
மேலும் கர்நாடகத்தில் விரைவில் பாஜக சார்பில் எடியூரப்பா ஆட்சி நடக்கும் அப்போது பசுக்களை கொலைசெய்வது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.