Published on 06/06/2018 | Edited on 06/06/2018
"ராமர் கோவிலைக் கட்டி முடியுங்கள், இல்லையென்றால் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துவிடும்" என்று அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்தியேந்திர தாஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அயோத்தியின் கடவுள் ராமரின் ஆசிர்வாதத்தோடு 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக ராமரை மறந்துவிட்டது. அதனால்தான் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற விரும்பினால், உடனடியாக ராமர் கோயிலைக் கட்டத் தொடங்கவேண்டும். இல்லாவிட்டால் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க வேண்டி வரும். ராமர் கோயிலை பாஜக கட்டத் தொடங்கிவிட்டால், ராமர் அந்தக் கட்சியை ஆசீர்வதிப்பார்" என்று கூறினார்.