Published on 16/07/2022 | Edited on 16/07/2022

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் எதையாவது செய்து வைரலாவது வழக்கம். அண்மையில் இளைஞர்களுடன் ரோஜா கபடி விளையாடும் காட்சிகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. 'வாகனமித்ரா' என்ற திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்கள் போல் காக்கி உடை அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.