Published on 18/05/2019 | Edited on 18/05/2019
நாடு முழுவதும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
![ashok lavasa writes letter to sunil arora about modi and amitshah](http://image.nakkheeran.in/cdn/farfuture/0pefnNO0GgxlxOBtMg5I8ouzBqEGZr8OcAZaERJb98s/1558159029/sites/default/files/inline-images/ashook.jpg)
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா மற்றும் மோடி ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் பேசியதாக காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அசோக் லவாசாவின் கருத்தை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. எனவே தனது கருத்தை ஏற்க மறுத்ததால் இனி நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என கூறி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, அசோக் லவாசா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மோடி, அமித்ஷா விவகாரத்தில் முக்கிய தேர்தல் அதிகாரிகளே இப்படி முரண்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.