காஷ்மீர் கத்துவாவில் ஆஷிபா பானு என்ற 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ப்பட்ட வழக்கிற்கான விசாரணை இன்று நடைபெற்றது.
நாடுமுழுவதும் பெண்கொடுமைகளுக்கு கடும் தண்டனை வேண்டுமென நிர்பயா வழக்கைபோல் மீண்டும் ஒரு கண்காணிப்பை பெற்ற இந்த கொடும் சம்பவத்திற்கான வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் குற்றப்பத்திரிகை நகல் குற்றம்சுமத்தப்பட்ட தரப்பிடம் கொடுக்க உத்தரவிட்டபட்டு வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினருக்கான வழக்கறிஞர் கூறுகையில், தங்கள் தரப்பு நார்கோ எனும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயராக உள்ளதாக கூறினார்.
சோதனைக்கு பிறகு எல்லாமே தெளிவாகிவிடும் என குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவனா சஞ்சய்ராம் கூறினான். மேலும் இந்த வழக்கில் சதி இருப்பதாகவும் வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என சஞ்சய் ராமின் மகள் கூறினார்.
அதேபோல் ஆஷிபாவின் தந்தை இந்த வழக்கை சண்டிகருக்கு மாற்றவேண்டும் எனவும் இந்த வழக்கில் எங்கள் குடும்பத்திற்கும் எங்களுக்காக போராடும் வழக்கறிஞருக்கும் பாதுக்காப்பு வேண்டும் என ஆசிபாவின் தந்தை கொடுத்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.