உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
In my #whatsappwonderbox I have no idea if the cashier’s technique is effective but you have to give him credit for his creativity! ? pic.twitter.com/yAkmAxzQJT
— anand mahindra (@anandmahindra) April 4, 2020
இந்த வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் முன் ஜாக்கிரதையாக இருந்து வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக வங்கி ஊழியர் ஒருவர், வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த செக்-ஐ கையால் வாங்காமல் இரும்பு கம்பியை கொண்டு வாங்கியுள்ளார். அதையும் தாண்டி அவ்வாறு வாங்கிய செக்-ஐ அயர்ன் பாக்சை கொண்டு அயர்ன் செய்கிறார். பிறகு செக்-ஐ கைகளால் தொடுகிறார். கரோனா வைரஸை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இவ்வாறு செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.