Published on 23/03/2019 | Edited on 23/03/2019
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம் வாங்கியதில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு 30 ஆயிரம் கோடி ரூபாயை புதிதாய் பதியப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக பல ஆவணங்கள் வெளியாகி மோடியை திருடன் என்கிற லெவலுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கி வருகின்றன. அந்த விவகாரத்தை திசைதிருப்ப மோடியும் பாஜகவும் எத்தனையோ முயற்சி செய்தும் திரும்பத்திரும் அது மோடியை சுற்றி வளைக்கிறது.
இப்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கடுமையாக அட்டாக் செய்திருக்கிறார்.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காகிதத்தில்கூட விமானம் செய்யத் தெரியாது. அப்படி இருக்கும்போது, விமானப்படை விமானம் செய்வதற்கான காண்ட்ராக்டை எப்படி மோடி அரசு கொடுத்தது? என்று தேர்தல் பிரச்சாரத்தில் வினா தொடுத்திருக்கிறார்.