Skip to main content

1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அபுசலீமுக்கு ஆயுள்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அபுசலீமுக்கு ஆயுள்!



1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அபுசலீம், கரிமுல்லா ஓஸான் கான் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளிததது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாகிர் முகமது மெர்சன்ட், ஃபிரோஸ் அப்துல் ரஷித் கான் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ரியாஸ் அகமது சித்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

1993 ஆம் ஆண்டு மும்பையில் பல்வேறு இடங்களில் 12 குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் காயமடைந்தனர். 27 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேதமடைந்தன.

24 ஆண்டுகள் விசாரணை நடத்திய தடா நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி இவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கு தண்டனை இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்