Published on 28/10/2023 | Edited on 28/10/2023

நேற்று மாலை சுமார் 6.52 மணி அளவில் அந்தமான் நிகோபார் தீவில் ஏற்பட்ட நில அதிர்வு பரபரப்பை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 4.2 எனப் பதிவாகி இருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மிதமான நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று பதிவான நிலநடுக்கத்தின் திறன் 4.8 என ரிக்டர் அளவுகோலில் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.