நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார நிபுணருமான அமர்தியா சென், இந்தியா ஆரம்ப கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டிலும் உரிய கவனத்தை பெறவில்லை என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல முடிவைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் 1999-ல் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். அதன் முக்கிய நோக்கமே, நாட்டின் கல்வி அறிவை மேம்படுத்துவது மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவதே. நேற்று (வெளிக்கிழமை) இந்த தொண்டு நிறுவனத்தின் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் பின்வருமாறு பேசினார்.
![Amartya Sen](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fy5rUIfpfZnz0gW1HkTjHxR6NNmS_DHaxai338iYYBQ/1550340318/sites/default/files/inline-images/Amartya-Sen-in.jpg)
“ஆயுஷ்மான் பாராத் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்தா பீமா யோஜனா போன்றத் திட்டங்களும் நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதாக இல்லை. வெறும் பணம் கொடுப்பது மட்டும் சுகாதாரத்தை மேம்படுத்தாது. அதுமட்டுமின்றி இந்தத் திட்டங்கள் குறுகிய சிந்தனையிலேயே செயல்பட்டு வருகின்றது.
சுகாதாரத்திற்கும், கல்விக்கும் இந்தியாவில் செலவிடப்படும் தொகை போதுமானதாக இல்லை. ஆரம்ப சுகாதாரம் இங்கு புறக்கணிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறார்கள். நான் ஜனநாயகத்தில் நம்பிக்கியுடையவன், இந்த விவகாரம் எல்லாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல முடிவைத் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை சுகாதாரம் பற்றி அண்டை நாட்டுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “அண்டை நாடுகள் நம்மிடமிருந்து ஜனநாயகத்தை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாம், அவர்களின் பொருளாதாரம் எப்படி அதி வேகத்தில் வளர்கிறது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.