இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அத்தேர்வுக்கான விண்ணப்பங்களை விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தன. இதனால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் நீட் தேர்வு செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இளங்கலை நீட் தேர்வு, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் விதமாக நீட் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.