Published on 19/03/2025 | Edited on 19/03/2025

சிந்துவெளி நாகரிகத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவரும், திராவிட நாகரிகம் எனும் கருதுகோளுக்கு வழிவகுத்தவருமான ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அருங்காட்சியக வளாகத்தில் இன்று திறந்து வைத்துள்ளார்.
சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிலையை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார். சிலை திறப்பு நிகழ்வில் அமைச்சர்கள் சுவாமிநாதன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். ஜான் ஹூபர்ட் மார்ஷல் பிறந்தநாள் இன்று என்பதால் அவர் நினைவைப் போற்றும் விதமாக இன்று அவருடைய உருவச்சிலை சென்னையை எழும்பூர் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ளது.