Published on 02/09/2021 | Edited on 02/09/2021

இந்தியாவில் கரோனா பரவல் காரணமாக நீண்டநாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் படிப்படியாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச அரசு, பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுவரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள மாநிலங்களில், ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.