சபாிமலைக்கு நாளை புதிய மேல்சாந்திகள் தோ்ந்தெடுக்கப்பட இருப்பதாக தேவசம் போா்டு தலைவா் பத்மகுமாா் தொிவித்துள்ளாா்.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல கால பூஜையொட்டி புதிய மேல்சாந்திகள் ஐப்பசி மாதம் பூஜைக்காக கோவில் நடை திறக்கும்போது தோ்ந்தெடுப்பது வழக்கம்.
தற்போது ஐயப்பா சாமி கோவில் மேல்சாந்தியாக உண்ணி கிருஷ்ணன் நம்பூதிாியும், மாளிகை புறத்தம்மன் கோவில் மேல்சாந்தியாக அனீஷ் நம்பூதிாியும் உள்ளனா்.
இந்த நிலையில் அடுத்த மண்டல கால பூஜைக்காக அடுத்த மாதம் காா்த்திகை 1-ம் தேதி நடை திறக்கப்படும். அன்று புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மேல்சாந்திதான் நடைதிறந்து அந்த மண்டல காலம் முமுவதும் பூஜை காாியங்களை செய்வாா்கள். இதனால் அதற்கான புதிய மேல்சாந்திகள் நாளை காலை 11 மணிக்கு தோ்ந்தெடுக்கப்படுகிறது.
மேலும் சபாிமலையில் பெண்களை அனுமதிப்பது சம்மந்தமாக அடுத்த கட்டமாக 19-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே பந்தள ராஜா குடும்பத்தினரும், போராட்டகாரா்களும் அமைதியாக இருக்கும் படி தேவசம் போா்டு தலைவா் பத்மகுமாா் கேட்டுக்கொண்டாா்.