Published on 14/11/2018 | Edited on 14/11/2018

ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்து விளக்கமளிக்க விமானப்படை அதிகாரி உடனடியாக ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். விமானப்படை அதிகாரி இன்றே ஆஜராக வேண்டும் என்று விமானப்படைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் தலைமை நீதிபதி, பாதுகாப்பு படை அதிகாரி தேவையில்லை, விமானப்படை அதிகாரியே தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், விமானப்படை அதிகாரி கோல்சா, வி.ஆர்.சௌத்ரி ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.