Published on 29/12/2018 | Edited on 29/12/2018
இந்திய சீன எல்லையில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2500 பேரை பத்திரமாக மீட்டுள்ளது இந்தியா ராணுவம். சிக்கிம் மாநிலத்தின் நாத்து லா மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு ஏற்பட்ட கடும் பனிபொழிவில் சிக்கி உணவு மற்றும் இருப்பிடம் இன்றி தவித்து வந்தனர். திடீரென ஏற்பட்ட இப்பனிப்பொழிவால் சுமார் 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதி வழியிலேயே நகரமுடியாமல் நின்றது. இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற இந்திய ராணுவம் அவர்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தது. மேலும் பனியை அகற்றும் வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.