நேற்று முன்தினம் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அவை நடவடிக்கைகளை முதல்முறை பெண் எம்பி ஒருவர் வழிநடத்தி மூத்த தலைவர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
மாநிலங்களவையில் அவைத்தலைவர் இல்லாதபோது, துணைத்தலைவரை வைத்து வழிநடத்துவார்கள். அவையிலிருக்கும் மூத்த தலைவர்கள் துணைத்தலைவராக செயல்படுவது வழக்கம். இந்நிலையில் மாநிலங்களவை துணைத்தலைவர் குழுவில் ஒரு பெண் எம்பிக்கு இடமளிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று மாநிலங்களவையில், தலைவர் வேங்கையாநாயுடு விடம் சில பெண் எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்டவர், பிஹாரை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் பெண் எம்பி கஹகஷான் பர்வீனை மாநிலங்களவை துணைத்தலைவர்களில் ஒருவராக கடந்த 27ஆம் தேதி நியமித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு மாநிலங்களவையில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போதுதான் பர்வீன் முதல் முறை எம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேங்கையாநாயுடு பூஜ்ய நேரத்திற்கு பிறகு துணைத்தலைவர் பர்வீன் அவைக்கு தலைமை வகிப்பார் என்று அறிவித்தார். இதையடுத்து கேள்விநேரம் தொடங்கியபோது, அவைத்தலைவருக்கான இருக்கையில் பர்வீன் அமர்ந்தபோது, அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி அவரை வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், வேங்கையாநாயுடு பர்வீன் தனது பணியை சிறப்பாகவும், மிகவும் நம்பிக்கையுடன் செய்ததாக பாராட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறை எம்பியான் பெண் அவைக்கு தலைமைவகித்து இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.