மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பேனர்ஜி, பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கம் மக்கள் மத்தியில் தாலிபான்களை உருவாகிவருகின்றனர். இந்த கட்சியில் நான் மதிக்கின்ற நல்லவர்களும் இருக்கின்றனர். ஆனால், பலர் மோசமான விளையாட்டை விளையாடுகின்றனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளிலும் வெற்றிபெற்று பாஜகவை வெளியனுப்ப வேண்டும். இவ்வாறு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய பேரணியை பாஜகவுக்கு எதிராக நடத்த வேண்டும். அதில் பல்வேறு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்படும்,என்றார்.
நேற்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக கட்சி பாஜகவை ஆதரித்து தவறான பக்கத்தில் சேர்ந்துவிட்டது. அதற்கான தக்க விலையை அது கொடுக்க வேண்டி இருக்கும்.
இறுதியில், ஒரு பந்தலைக்கூட சரியாக போடத்தெரியாத பாஜக எப்படி நாட்டை சரியாக காப்பாற்றும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வாரத்தில் மின்தாபுர் என்னும் ஊரில் பிரதமர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பந்தல் சரிந்து விழுந்து 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கூட்டத்தில் பாஜகவில் இரண்டு முறை மாநிலங்களவை எம்பியாக இருந்த சாந்தன் மித்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.