இஸ்லாமிய மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்க முடியும். அவ்வாறு கொடுக்கும் வழக்கம் உண்டு. அப்படி மக்களால் வக்பு பத்திரத்தின் மூலம் கொடுக்கப்படும் சொத்துக்கள் மற்றும் நிலங்களை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் தனியார் நிறுவனங்களும் பொது நிறுவனங்களும் செயல்படுகின்றது.
இதனிடையே டெல்லியில் வக்பு வாரிய நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியின் ஆக்லா தொகுதியின் எம்.எல்.ஏவான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமனத்துல்லா கான் வக்பு வாரிய தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே வக்பு வாரிய பணி நியமனத்தில் முறைகேடுகள் செய்ததாக அவரின் மீது புகார் எழுந்தது.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமனத்தில்லா கானின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது 24 லட்சம் மற்றும் உரிமம் இல்லாத இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமனத்துல்லா கானை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்ய முற்படுகையில் அமனத்துல்லா கானின் உறவினர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது.