டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ், நேற்று முன்தினம் இரவு தன் ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு, ஆதரவாளர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர் இருந்த பகுதியில் மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நரேஷ் யாதவ் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில், ஆம் ஆத்மி கட்சி தோன்ற ஒருவர் பலியானார்.
![aam aadmi mla naresh yadav case](http://image.nakkheeran.in/cdn/farfuture/6vwaVsI3ZQBcJQZT1IHAbqCKbo3KSwABynaMZp8ES24/1581577303/sites/default/files/inline-images/zdfbdfgnb.jpg)
7 ரவுண்டுகள் சுடப்பட்டதில் 5 குண்டுகள் ஆம் ஆத்மி தொண்டர் ஒருவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மற்றொரு தொண்டர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இது தொடர்பாக தர்மேந்தர் (40) என்பவரை நேற்று கைது செய்தது.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எம்.எல்.ஏ வுக்கு குறிவைக்கவில்லை எனவும், அக்கூட்டத்தில் இருந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவரை கொல்லவே திட்டமிட்டதாகவும் தர்மேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அந்த ஆம் ஆத்மி தொண்டரை தர்மேந்தர் சுட்டுக்கொன்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.