தீபாவளி பண்டிகைக்காக 60 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மொத்தம் 12 வழித்தடங்களில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லை நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. கொச்சுவேலியில் இருந்து பெங்களூரு, சென்னையிலிருந்து சந்திரகாச்சி, சென்னையிலிருந்து புவனேஸ்வர், நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் ஆகிய இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.
தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் இடையே நவம்பர் 10, 17, 24 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. நவம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து மங்களூர், எர்ணாகுளத்தில் இருந்து தன்பாத் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களிலிருந்தும் தென்னிந்தியாவிற்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் சென்னையிலிருந்து நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.