Skip to main content

'100க்கு 367 மார்க்' - மதிப்பெண்களை வாரிக் கொடுத்த பல்கலைக்கழகம்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

kl

 

மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு 100க்கு தேர்வு நடத்தி மதிப்பெண்களை 200, 300 என வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சமீபத்தில் எம்.எட்., தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் 100 மதிப்பெண் கொண்ட தேர்வுக்கு 138, 151, 367 என்று மதிப்பெண்களை வழங்கியுள்ளது. இதுவரை வரலாற்றில் எந்த ஒரு பல்கலைக்கழக தேர்வு முடிவும் இதுபோன்று வராத நிலையில், எப்படி இந்த தவறு நடைபெற்றது என்று அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், தேர்வு முடிவுகள் அனைத்தும் மீண்டும் சரி செய்யப்படும் என்றும், தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்