Published on 07/09/2019 | Edited on 07/09/2019
சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறங்குகிறது. இதற்கான பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து பிரகியான் ரோவர் இன்று அதிகாலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் நிலவின் நிலப்பரப்பை ஆய்வு செய்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் அனுப்பும். இந்த நிகழ்வை காண இந்தியா மட்டுமல்லாமல் உலக மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.