Published on 03/02/2019 | Edited on 03/02/2019
![temple](http://image.nakkheeran.in/cdn/farfuture/h8ncc4vFH5pOfHIqIGGcNev9v4GwyKHbEq3YyA76cbA/1549202182/sites/default/files/inline-images/z1_5.jpg)
திருப்பதியில் கோவிந்தராஜ சாமி கோவில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளை அலங்கரிக்க வைக்கப்பட்டிருந்த 3 தங்க கிரீடங்கள் மாயமானதாக தெரியவந்துள்ளது.
நேற்று மாலை கோவில் பணியில் இருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினார். பணியில் இருந்த அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களை கோவிலுக்கு வரவழைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் திருப்பதி கோவிந்தராஜர் சுவாமி கோவிலில் காணாமல் போன கிரீடங்களை கண்டுபிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் அன்புராஜ் தெரிவித்தார்.