ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து உலக அளவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் பல்வேறு கட்டங்களாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் முன்னதாக 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே உயிரிழப்பு எண்ணிக்கை 288 அல்ல 275 தான் தவறாக உடல்கள் எண்ணப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 228 என தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த 288 பேரில் 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், மீதமுள்ள 83 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் தொடர்ந்து அந்த உடல்களின் அடையாளம் காணுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை இப்படி மாற்றி மாற்றி ஒடிஷா அரசு அறிவிப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.