கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கேரள போலீசார் இந்த ஆண்டு சபரிமலை வந்த பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று மறுத்து விட்டனர். இந்த பிரச்சனை குறித்து பிந்து அம்மணி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
பெண்கள் இருவரின் மனுக்களும் தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் உத்தரவிட்ட தலைமை நீதிபதி, சபரிமலையில் இப்போது பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையை சீர்குலைக்க விரும்பவில்லை என்றார். அதேசமயம் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது என்றும், சபரிமலை கோவிலுக்குள் போலீசார் நிறுத்தப்படுவதை நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.