Skip to main content

இந்தியா முழுவதும் பருவமழைக்கு இதுவரை 2,391 பேர் பலி - மத்திய அரசு தகவல்

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

2019ம் ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த சீசனில் பெய்த கடும் மழை, வெள்ளத்துக்கு 2 ஆயிரத்து 391 பேர் பலியாகி உள்ளனர். 15 ஆயிரத்து 729 கால்நடைகள் உயிரிழந்தன.  8 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 63 லட்சத்து 975 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய பயிர்கள் அழிந்து நாசம் ஆயின. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.



வெள்ளச்சேத மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 176 குழுவினர் ஈடுபட்டு, 98 ஆயிரத்து 962 பேரையும், 617 கால்நடைகளையும் மீட்டனர். நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 23 ஆயிரத்து 869 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இந்த தகவல்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்