Published on 16/04/2021 | Edited on 16/04/2021
தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் பலகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. முறையாக கணக்கு காட்டாமல் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக எடுத்துச் செல்லப்படும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 446.28 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் இதுவரை 1,001.4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.