தெலுங்கானாவில் பத்து ரூபாய்க்கு பட்டு புடவை வாங்க சென்ற பெண்கள் ஷட்டரை உடைத்து கொண்டு கடைக்குள் ஓடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஹைதராபாத்தின் சித்திபேட்டையில் சி எம் ஆர் என்ற ஷாப்பிங் மாலில் ஒரு கடையில் பத்து ரூபாய்க்கு பட்டுப்புடவை விற்கப்படுவதாக விளம்பரம் தரப்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீ போல அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பரவ கூட்டம் கூட்டமாக அந்த கடையின் வாசலில் பெண்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலில் மூச்சுத் திணற திணற கடையின் சிறிய வாயில் வழியே உள்ளே புகுந்த பெண்கள் முண்டியடித்துக்கொண்டு புடவை வாங்க முற்பட்டனர்.
இதனையடுத்து வெளியில் நின்று கொண்டிருந்த பெண்கள் தங்களுக்கு பட்டுப்புடவை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற குழப்பத்தில் கடையின் ஷட்டரை உடைத்து கொண்டு முண்டியடித்துக் கொண்டுகீழே விழுந்து எழுந்து ஓடினார். அப்படி ஷட்டரை உடைத்து கொண்டு பெண்கள் கூட்டமாக உள்ளே ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த கடும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பெண்களிடமும் கைவரிசை காட்டியுள்ளனர். அங்கு வந்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகை திருடப்பட்டது.