Skip to main content

விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லிட்டரின் உடலுக்கு இறுதி அஞ்சலி!   

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

rajnath singh

 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத்தும் மேலும் 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

 

இதனைத்தொடர்ந்து நேற்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெலிங்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களின் உடல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினார். அத்துடன் முப்படை தலைமை தளபதியின் மகள்கள், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார். அதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மரியாதைச் செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

 

இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லிட்டரின் உடலுக்கு டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் பிரிகேடியர் லிட்டருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் இராணுவ உயரதிகாரிகள் பிரிகேடியர் லிட்டருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்