![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/gQ-HexekP7nyBQJqoPZ_X5af0egQtVU8gsC41D2Ec0s/1546118458/sites/default/files/inline-images/vvvv%20us.jpg)
சிகிச்சை தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது என்று செய்திகள் வந்தது. தினமும் அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இங்கிருப்பவர்களிடம் பேசும் வழக்கத்தை கொண்ட விஜயகாந்த், நேற்று பேசவில்லை. அத்துடன் அவரது மச்சான் சுதீஷ் நேற்று அவசரமாக தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி தேமுதிக தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருப்பதாக படங்கள் வெளியாகியது. அதையடுத்து தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.
நடந்த என்ன என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள தமிழ் நிருபர்கள் பிரேமலதாவை தொடர்புகொண்டு கேட்டதாகவும், அதற்கு பிரேமலதா, கேப்டனுக்கு தைராய்டு பிரச்சனை. இன்னமும் கேப்டனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். தற்போது அமெரிக்காவில் விடுமுறை ஓய்வில்தான் இருக்கிறார் என தெரிவித்ததாக அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையிலும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனிடம் தந்தையின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்பாவுக்கு தொண்டையில் தைராய்டு பிரச்சனை உள்ளது. அதற்காக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். மற்றபடி ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/hjYUp1mPtesjvWw0PDKG2e3oqpE9rzoMtqw3eiqPjuE/1546118500/sites/default/files/inline-images/vijayakanth%20us1.jpg)