Skip to main content

பழிக்கு பழி தீா்த்தோம் –இளம் கொலையாளிகள் வாக்குமூலம்

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
dddd

 

 

திருச்சியை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் தொடா் கொலைகள், பழைய ரவுடிகள், கொலையாளிகளின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் புதிய ரவுடிகளும், கொலையாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் புதிதாக உருவெடுத்துள்ள கொலையாளிகள், ரவுடிகள் 18 வயதிற்கு கீழ் உள்ளவா்கள் தான் என்பது அதிர்ச்சிக்குறிய சம்பவமாக மாறியுள்ளது.


கடந்த மே மாதம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நரியன் தெரு பகுதியை சோ்ந்த பிரகாஷ் என்பவா் ஸ்ரீரங்கம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சோ்ந்த விக்னேஷ் (17), உதயா(17), கோகுல்(16), மாரி(17) என்ற இளம் கொலையாளிகளை காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். 

 

சில மாதங்களுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட விக்னேஷ், உதயா, கோகுல், மாரி உள்ளிட்டோர் பிணையில் வெளியே வந்தனா். இதில் விக்னேஷ் மட்டும் தொடா்ந்து பல குற்ற சம்பங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை காவல்துறை குண்டாஸ் வழக்கு போட்டது. 

 

மற்ற மூன்று பேரும் அதே பகுதியில் தனக்கு எதிராக யார் இருந்தாலும் தீா்த்துகட்டுவோம் என்று பலரை மிரட்டி வந்த நிலையில், நேற்று  மாரி (17) என்பவா் தன்னுடைய செல்போனை பழுது பார்க்க திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியசாமி டவரில் உள்ள செல்போன் பழுது பார்க்கும் கடைக்கு வந்தபோது திருவானை கோவில் பகுதியை சோ்ந்த சித்திக்(16) என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு, மோதலில் முடிய சித்திக் தன்னுடைய நண்பா்களுக்கு போன் செய்து அவா்களை வரவழைத்து மாரியை சரிமாறியாக கத்தியால் குத்தியுள்ளனா். 

 

இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் மாரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சித்திக் மற்றும் அவனுடைய கூட்டாளிகளான கவுதம் (17), ஜீவா(16), சண்முகம்(17), சந்தோஷ(16) ஆகியோர் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனா். அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட உள்ளனா்.

 

திருச்சியில் கடந்த சில மாதங்களில் மட்டும் திருட்டு, வழிப்பறி, கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. காவல்துறை ஒருபுறம் அதனை தடுக்க பல புதிய யுக்திகளை கையாண்டாளும், பெரும்பாலான திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் காவல்துறையும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனா். 

 

மற்றொரு புறம் காவல்துறை தொடா்ந்து ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது, மாற்று உடையில் காவலா்கள் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனா். ஆனால் இந்த குற்றங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை விரைந்து இந்த குற்றங்களை தடுக்க புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்