Skip to main content

8 வழிச்சாலை விவகாரம்: மக்களை சந்திக்க சென்ற சீமான் கைது!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
seeman

சேலம் மாவட்டம் பாரப்பட்டியில் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகளை சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பாரப்பட்டியில் 8 வழிச்சாலைத் திட்டத்தால் நிலங்களை இழந்து பாதிக்குள்ளான மக்களை இன்று காலை சீமான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் காரணம் தெரிவிக்காமல் சீமானை கைது செய்ய முற்பட்டனர்.

இதையடுத்து, உரிய காரணம் இல்லாமல் கைதாக முடியாது என எதிர்ப்பு தெரிவித்து சீமான் தரையில் அமர்ந்தார். அவருடன் கிராம மக்களும் திடீர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான சூழ்ந்து கொண்டு கைது செய்ய விடாமல் தரையில் அமர்ந்தனர்.

இதைதொடர்ந்து, இந்த பகுதியில் உங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் தங்களை கைது செய்கிறோம் எனக்கூறி சீமானை காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். இதில் சீமானுடன் கிராம மக்களும் சேர்த்து கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கரும்பு விவசாயி சின்ன விவகாரம்-நாளை விசாரணை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
ntk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்னம் தொடர்பாக தங்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார்.

nn

தேர்தல் வரி கட்டியுள்ளதோடு அனைத்து தேர்தல்களிலும் தாங்கள் பங்கேற்றுள்ளதால் தங்களுக்கே அந்த சின்ன ஒதுக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.

வரும் 26 ஆம் தேதி அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக இன்று அல்லது நாளைக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். அதில், 'சின்னம் தொடர்பான தங்களது வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை காலை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story

'அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்'-நாம் தமிழர் கட்சி கோரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Need to be investigated as an urgent case' - Nam Tamil Party demand

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்னம் தொடர்பாக தங்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார்.

தேர்தல் வரி கட்டியுள்ளதோடு அனைத்து தேர்தல்களிலும் தாங்கள் பங்கேற்றுள்ளதால் தங்களுக்கே அந்த சின்ன ஒதுக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.

வரும் 26 ஆம் தேதி அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக இன்று அல்லது நாளைக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதில், 'சின்னம் தொடர்பான தங்களது வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.