திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக நேற்று இரவு 1.30மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.
மருத்துவ நிபுணர்கள் குழு, கலைஞரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி குடும்பத்தினர், திமுக மூத்த நிர்வாகிகள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.