நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் மண்டலத்தில் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் ஆகியவை உள்ளன.
இரண்டாம் மண்டலத்தில் தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளன.
மூன்றாம் மண்டலத்தில் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளன.
நான்காது மண்டலத்தில் நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் உள்ளன.
ஐந்தாவது மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளன.
ஆறாவது மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி உள்ளன.
ஏழாவது மண்டலத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளன.
எட்டாவது மண்டலத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், சென்னை காவல் எல்லைக்குப்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.