காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
192 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய காவிரி மேலாண்மை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், மத்திய அரசு அமைக்க மறுத்துவிட்டது. விசாரணையின் இடையே, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி பல இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தாலும், கர்நாடக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
192 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய காவிரி மேலாண்மை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு தரப்படும் நீரின் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் 264 டிஎம்சி நீர் கேட்ட நிலையில், 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த அளவை விட குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.