Published on 13/05/2019 | Edited on 13/05/2019
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது, இதனால் அந்த தொகுதியில் நடக்கவுள்ள தேர்தலை நிறுத்தவேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என கூறியுள்ளார். மே 19ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மனு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.