Published on 17/07/2020 | Edited on 17/07/2020

கரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று (17/07/2020) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.