அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அதற்கு பிறகு கங்கைகொண்டானில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய டிடிவி தினகரன், சசிகலா ஜெயிலில் இருந்து வந்தவுடன், எடப்பாடி பழனிசாமி போய் சேர்ந்துவிடுவார் என்று ஏதேதோ சொல்லி குழப்புவார்கள். ஜெயிலில் போய் யாரும் பார்க்கவே இல்லை. சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் இருந்தபோது பரோல் கொடுக்கக்கூட அவ்வளவு கண்டிஷன் போட்டு, 5 நாள்தான் வரணும். அவரை பார்ப்பதை தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்று சொல்லி கண்டிஷன் போட்டார்கள். அதைப்போலவே நடராஜன் மறைந்தபோது 10 நாளுக்கு மேலாக பரோல் கொடுக்காமல் தடை செய்தவர்கள் இவர்கள்.
இன்றுவரை ஜெயில்ல போய் யாரும் பார்க்கவில்லை. ஆனால் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி ஒருவர் சொல்கிறார், சசிகலா வெளியே வரவேண்டும் என்று பிராத்தனை பண்ணுகிறாராம். இப்படி துரோகம் செய்தவர்களுக்கு எப்படி ஆதரிப்பார்கள். கட்சியை பதிவு செய்துவிட்டோம். உரிய நேரத்தில் நிலையான சின்னம் கிடைத்துவிடும். அந்த சின்னம் முதல் சின்னமாக ஓட்டு மெஷினில் வரும். கட்சியினர் விருப்பப்படியே நல்ல கூட்டணியை அமைப்போம். ஆளும் கட்சி பணப்பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. அதேபோல எதிர்க்கட்சி கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது.
அமமுகவுக்கு பிரசாந்த் கிசோர் மாதிரி ஆளெல்லாம் தேவையில்லை. இந்த மேடையில் அத்தனை பேரும் பிரசாந்த் கிசோர்தான். அமமுக கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாத வேலையா? பிரசாந்த் கிசோர் சொல்லிக்கொடுக்கணும். எத்தனை தேர்தலை பார்த்தவர்கள் இன்று நம்முடன் இருக்கிறார்கள். பிசினஸ் பண்றத்துக்கு கண்சல்டன்ட் வைத்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். கட்சி நடத்துவதற்கெல்லாம் கண்சல்டன்ட் வைக்கிறதா? என பேசினார்.