கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதற்கு நீதிக்கேட்டு பெரியளவில் போராட்டம் நடைப்பெற்று. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. சிலரை காப்பாற்ற காவல்துறை, அதிகார வர்க்கம் முயல்கிறது என மாணவி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மாணவியின் தாய் செல்வி, சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். நீதிமன்றம் மூலமாக சிபிசிடி தரப்பில் ஆவணங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அதில் 26 சிடிக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் ஒலி-ஒளியாகவில்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
இதுக்குறித்தான வழக்கு விசாரணைக்கு வந்தது. அது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். அப்போது வீடியோ காட்சிகள் இயக்கபடாததற்கு காரணம் என்ன? ஏன் இயங்கவில்லை என தொழில்நுட்ப உதவியுடன் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டர்.
மேலும் போலீசார் முதல் தகவல் அறிக்கை ஏடுகளை சரிவர பின்பற்றவில்லை எனக் குற்றம் சாடினார். அடுத்த வாய்தாவிற்கு வரும்போது அனைத்து ஆவணங்களும் எடுத்து வரவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.