Skip to main content

ஜெ.,நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
jaya memo


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் அருள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடிருந்தார். அப்போது அருள் திடீரென தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்டவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் காவலர் அருள், மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்தை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்