Skip to main content

தோனி ரசிகர் மீது சீமான் கட்சியினர் தாக்குதல்

Published on 10/04/2018 | Edited on 10/04/2018
doni

 

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.   இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.

 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்வதைக்கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட பலருடன் பல்லாயிரக்கணக்கானோர் அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

doni2doni3doni4

 

போராட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அனுமதியை டிக்கெட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.  சிஎஸ்கே டி-சர்ட் அணிந்து ஸ்டேடியம் நோக்கி சென்றவர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

ஐபிஎல் போட்டியை காண கருப்பு சட்டையுடன் சென்ற ரசிகர்கள் மீது தாக்குதல் ஏதும் நடத்தாததால் பலரும் கருப்பு சட்டையில் வந்தனர். ஆனால், மைதானத்தில் போட்டியைக்காண கருப்பு சட்டைக்கு அனுமதி இல்லாததால் மைதானத்தின் உள்ளே சென்ற ரசிகர்கள் வேறு உடைக்கு மாறிக்கொள்கின்றனர்.

 

சிஎஸ்கே உடையில் வந்த தோனி ரசிகர் சரவணன் மீது நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக தாக்கியதாக சரவணன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

 

அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அண்ணாசாலையே போராட்டக்களமாக மாறியது.

சார்ந்த செய்திகள்