நாளை மறுநாள் 9ம் தேதி தமிழக அமைச்சரைவை கூட்டம் கூடுகிறது. முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும், டுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை மறுநாள் 9ம் தேதி தமிழக அமைச்சரைவை கூட்டம் கூடுகிறது. அக்கூட்டத்தில் 7 பேர் விடுதலை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.