Published on 21/09/2018 | Edited on 21/09/2018

சமூக வலைத்தளங்களில் மின் துறை அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு கருத்து பரப்பிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய திமுக உறுப்பினருமான சரஸ்வதி, மின் துறை அமைச்சர் தங்கமணி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்ததுள்ளார். இதை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்த சரஸ்வதி கைது செய்யப்பட்டுள்ளார்.