காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரர் (82), உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், பக்தர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, இன்று காலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.
இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஜாபர் ஷேரிப், மத்திய அமைச்சர் சதானந்தா கௌடா உள்ளிட்டார கலந்துகொண்டனர்.
முக்கிய கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு ஜெயேந்திரர் உடலுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதி அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர். பின்னர் அமர்ந்த நிலையிலேயே ஜெயேந்திரர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Published on 01/03/2018 | Edited on 01/03/2018