நாடாளுமன்ற தேர்தலில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, திமுக ஒரு ராஜ்யசபா சீட்டை மதிமுகவிற்கு கொடுத்தது.
மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2009ம் ஆண்டு திமுக போட்ட வழக்கு அதற்கு தடையாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் திமுக தேசதுரோக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதனால் மதிமுகவிலிருந்து வைகோ மாநிலங்களவைக்கு செல்வார் என்ற முடிவு இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஜூலை 5ஆம் தேதி வரும் தீர்ப்பைப்பொறுத்துதான் வைகோ மாநிலங்களவைக்கு செல்வாரா என்பது உறுதியாகும்