துபாயின் முதல் இந்துக் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி!
ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரில் அமைய இருக்கும் முதல் இந்துக் கோவிலுக்கு இந்தியப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 2015ஆம் ஆண்டிற்குப் பின் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. அந்தக் கூட்டமைப்பின் தலைநகரான அபுதாபியில் அமையப் பெறவுள்ள பிரம்மாண்ட இந்துக் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அந்த விழாவைத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் அரபு நாட்டு அரசர் முகமது பின் ஜயீத் அல் நயானும் கலந்துகொண்டார்.
சுமார் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்தக் கோவில், முழுக்கமுழுக்க கற்சிற்ப வேலைப்பாடுகளால் ஆனது. வரும் 2020ஆம் ஆண்டு இந்தக் கோவிலின் வேலைப்பாடுகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் சிற்ப வேலைப்பாடுகளுக்காக இந்தியாவைச் சேர்ந்த தலைசிறந்த சிற்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அபுதாபியில் 30 லட்சம் இந்தியர்கள் குடியிருக்கின்றனர். பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த விழாவின் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகின. அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘கட்டிடக்கலை மற்றும் சிறப்புகள் மட்டுமின்றி இந்தக் கோவில் உலக மக்கள் அனைவருக்குமான நற்செய்தியாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ராமதாஸ் பேட்டி
பிரதமரும், ஜனாதிபதியும் ஏன் வரவில்லை? ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்விகீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஈரோட்டில் விவசாயிகள் போராட்டம் ஈரோடு மாவட்ட பாமக., பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த பாமக., நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் "சட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார்,ராஜாஜி, திருவள்ளுவர்,அண்ணா, காமராஜ், எம்ஜிஆர் உள்ளிட்ட 10 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில், எம்ஜிஆர்., படம் மட்டும் ஜெயலிலதாவால் திறக்கப்பட்டது. மற்ற படங்கள் வெளிமாநில ஆளுனர்களால் திறக்கப்பட்டது. குற்றவாளியான ஜெ., படம் சட்டசபையில் வைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனாலும், இன்று ஜெயலலிதா படம் திறக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் சொன்னாலும் அந்தப்படம் எடுக்கப்போவது கிடையாது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓட்டு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல. அவர்கள் கட்சியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் சீர் திருத்தம் செய்ய ஆணையம் முன் வர வேண்டும்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துணை வேந்தர்கள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சிபிஐ.,மூலம் விசாரனை செய்யப்படவேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணியை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். கியாஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் கியாஸ் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்டிரைக் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக., திமுக., ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். அந்த இரண்டு கட்சிகளுடன் பா.ம.க. இனி கூட்டணி வைக்ககாது," என்றார்.
பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் தற்கொலை!
பட்டுக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் விவசாயி. இவரது மகன் சந்தோஷ்ராஜா (வயது 17) . இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். பள்ளியில் ஒழுங்காக படிக்கவில்லை எனக்கூறி, பள்ளியின் இயற்பியல் பாட ஆசிரியர் ராஜா என்பவர் பெற்றோரை அழைத்து வருமாறு திங்கள் கிழமை மதியம் பள்ளியை விட்டு வெளியில் அனுப்பி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவர் சந்தோஷ்ராஜா பெரியகோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் பள்ளி முன்பு அதிராம்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒருசிலர் பள்ளிக்குள் நுழைந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். ஆசிரியர் ராஜா தலைமறைவாகி விட்டார். பள்ளி முதல்வர் ராம்தாஸ் செல்லையாவை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர். டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் முழக்கமிட்டனர்.
ஈரோடு மாவட்ட பாமக., பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த பாமக., நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் "சட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார்,ராஜாஜி, திருவள்ளுவர்,அண்ணா, காமராஜ், எம்ஜிஆர் உள்ளிட்ட 10 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில், எம்ஜிஆர்., படம் மட்டும் ஜெயலிலதாவால் திறக்கப்பட்டது. மற்ற படங்கள் வெளிமாநில ஆளுனர்களால் திறக்கப்பட்டது. குற்றவாளியான ஜெ., படம் சட்டசபையில் வைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனாலும், இன்று ஜெயலலிதா படம் திறக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் சொன்னாலும் அந்தப்படம் எடுக்கப்போவது கிடையாது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓட்டு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல. அவர்கள் கட்சியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் சீர் திருத்தம் செய்ய ஆணையம் முன் வர வேண்டும்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துணை வேந்தர்கள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சிபிஐ.,மூலம் விசாரனை செய்யப்படவேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணியை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். கியாஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் கியாஸ் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்டிரைக் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக., திமுக., ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். அந்த இரண்டு கட்சிகளுடன் பா.ம.க. இனி கூட்டணி வைக்காது," என்றார்.
அதிக நேரம் வேலைபார்த்ததால் உயிரிழந்த ஊழியர்!
நிசப்தமானது குரலற்றவர்களின் குரல்! - அஸ்மா ஜகாங்கீர் எனும் அணையா தீபம்!! கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு அதிக நேரம் வேலைபார்த்ததால் சோர்வடைந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு, அந்த நிறுவனம் ரூ.15 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது.ஜப்பான் நாட்டில் இயங்கி வரும் நிறுவனம் கிரீன் டிஸ்ப்ளே கம்பெனி. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த கோடா வதனாபே (24) எனும் ஊழியர், கடந்த 2014ஆம் ஆண்டு, ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். அவர் உயிர் பிரியும்போது ‘கரோஷி’ எனக் கூறிவிட்டு இறந்திருக்கிறார். ஜப்பான் மொழியில் கரோஷி என்றால் கூடுதல் வேலை எனப் பொருள்படும்.
இந்நிலையில், வதனாபேவின் தாயார் ஜப்பான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த பிப். 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘ஜப்பானில் அதிக வேலை நேரத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக நிகழும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயங்களில் நிறுவனங்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு தகுந்த இடைவெளியுடன் கூடிய வேலைநேரத்தை அமல்ப்படுத்தவேண்டும். விபத்தில் உயிரிழந்த வனதாபேவின் குடும்பத்துக்கு 76 மில்லியன் யென் இழப்பீடாக வழங்கவேண்டும்’ என தீர்ப்பளித்தார். இதையடுத்து, கிரீன் டிஸ்ப்ளே நிறுவனம் வனதாபேவின் குடும்பத்திற்கு நீதிபதி குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையினை வழங்கியுள்ளது.
அரசியலில் வலம் வரும் ஓ.பி.எஸ் வாரிசு!
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் அரசியலில் குதித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதுபோல் தற்போது மாநில அளவில் அரசியல் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருக்கக்கூடிய ஓ.பி.எஸ்-சின் மூத்த வாரிசான ரவீந்திரநாத்தும் அரசியலில் குதித்து வலம் வருகிறார். ஜெ., முதல்வராக இருந்த போது ஓ.பி.எஸ் மேல் அதிக மரியாதை வைத்து இருந்தார். அப்பொழுது தான் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத்துக்கு ஜெ., திருமணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் தான் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத் இளைஞர் இளம் பெண் பாசரையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்மூலம் அரசியலில் குதித்த ரவி மாவட்ட அளவில் பாசரையையும் வளர்த்து வந்தார். இந்தநிலையில் தான் ஜெ.,விடம் தங்கதமிழ்ச்செல்வன் நெருக்கமாகி, மாவட்ட செயலாளர் பதவியை வாங்கியவுடனே ரவீந்திரநாத்திடம் இருந்த இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பதவியை பறித்து தனது ஆதரவாளரான மணிக்கு தங்கதமிழ்ச்செல்வன் கொடுத்தார். இதனால் மனம் உடைந்த ரவி அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி வந்தார். அதன் பின் ஜெ.,மறைவுக்கு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போதும் ரவி வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்தவர் தான் தற்பொழுது ஓபிஎஸ் துணை முதல்வரானவுடனே மீண்டும் அரசியலில் குதித்து விட்டார்.
கடந்த மூன்று நாட்களாக தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் முகாம் போட்டு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற வனத்துறை ஆய்வு, சமூகநலத்துறை. ஜல்லிக்கட்டு உள்பட அனைத்து அரசு விழாவிலும் ஓ.பி.எஸ் கூடவே ரவீந்திரநாத்தும் கலந்து கொண்டார்.
அதுபோல் தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விழா மேடையிலேயே உட்கார வைத்தார். ஒவ்வொரு விழா முடிந்த பின்பு எந்த அளவுக்கு ஓ.பி.எஸ்.\க்கு அதிகாரிகளும். கட்சிகாரர்களும் மரியாதை கொடுப்பார்களோ அந்த அளவுக்கு ரவீந்திரநாத்துக்கும் மரியாதை கொடுத்தனர்.
இதுபற்றி மாவட்ட பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் சிலரிடம் கேட்ட போது... ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாம் இப்போது தீடீரென அரசியலில் குதித்து விட்டார். அதுபோல் தற்பொழுது அண்ணன் மாநில அளவில் தலைவராகி விட்டதால் மாவட்டத்தில் சரி வர கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் தற்போது மகன் ரவீந்திரநாத்தை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்த இருக்கிறார். அதை உண்மையிலேயே நாங்களும் வரவேற்கிறோம். இந்த மாவட்டத்தில் அண்ணன் ஓபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் செயல்பட்டு வருகிறார். அவரை ஓரம் கட்ட வேண்டும் என்றால் ரவியை களத்தில் இறக்கினால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் ஓ.பி.எஸ் தனது மகனை இறக்கி இருக்கிறார். அது எங்களுக்கு சந்தோசம். அதோடு இனிமேல் கட்சிகார்களின் குறை, நிறைகளையும் ரவி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்று கூறினார்கள். ஆக ஓ.பி.எஸ் வாரிசு மீண்டும் அரசியலில் குதித்திருப்பது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெ.உருவப்படம் திறப்பு!
உறைபனியின் மேலே ஐஸ் கிரிக்கெட்! சிக்ஸர்கள் பறக்கவிட்ட சேவாக்!!முகநூலில் வைரலான வீடியோவால் சிறுவனைச் சந்தித்த கேரள முதல்வர்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.
சட்டப்பேரவையில் ஏற்கனவே 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மற்ற தலைவர்களின் படங்களைப் போன்று 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட ஜெயலலிதா படம் சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. பச்சை நிற சேலையுடன் ஜெயலலிதா நிற்பது போன்று அவரது உருவப்படம் வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாசகமான அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெயல லிதாவின் உருவப்படத்தை கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் ஒவியமாக வரைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு நேர்எதிரே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.
மின்வாரிய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!
மின்வாரிய தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக
தொழிற்சங்கங்களை உடனடியாக அழைத்துப்பேசுக
தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
மின்வாரிய தொழிலாளர்களுக்கு 1.12.2015 முதல் நடைமுறைபடுத்தப்பட்டிருக்க வேண்டிய புதிய ஊதிய விகிதம் இன்று வரையிலும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. நிலுவைத்தொகை மறுப்பதற்கான உத்தியாகவே திட்டமிட்டு காலதாமதத்தை மின்வாரியமும் அரசும் ஏற்படுத்தி வருகின்றன.
இரண்டாண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் ஏறத்தாழ ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவிருப்பதாக தொழிற்சங்கங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அமைச்சரும், அரசும், தொழிலாளர் நலத்துறையும் கண்ணாமூச்சியாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான், சிஐடியுவுடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் 16.2.2018 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஜனவரி மாதத்திலேயே வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை உருப்படியான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாகவே தெரியவில்லை.
வருடக்கணக்காக தொழிலாளர்களின் பொறுமையை சோதிப்பதும், வேலைநிறுத்தம் செய்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என திசை திருப்ப முயற்சிப்பதும் நியாயமான அணுகுமுறை அல்ல. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மின்வாரிய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
எனவே, மின்சார வாரியமும், தமிழக அரசும் உடனடியாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தி அமல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
குரலற்றவர்களின் குரல்! - அஸ்மா ஜகாங்கீர் எனும் அணையா தீபம்!!
ஜெ.,படத்திறப்பு விழாவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வராதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்விஅதிக நேரம் வேலைபார்த்ததால் உயிரிழந்த ஊழியர்! ரூ.15 கோடி இழப்பீடு தந்த நிறுவனம்!!
மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான அஸ்மா ஜகாங்கீர் நேற்று மாரடைப்பில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக செயல்பட்டு வந்தவர் மூத்த வழக்கறிஞர் அஸ்மா ஜகாங்கீர். பாகிஸ்தானின் லாகூரில் 1952ஆம் ஆண்டு, ஜனவரி 27ஆம் தேதி பிறந்தவர். அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இளம் வயதில் இருந்தே மனித உரிமைகளின் மீது நாட்டம் கொண்டவராக இருந்தார் அஸ்மா.
பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து சட்டமும் தேர்ந்து வழக்கறிஞராக பணியில் சேர்ந்த அஸ்மா, உலக அளவில் அறியப்பட்ட மனித உரிமை வழக்கறிஞர் ஆவார். மனித உரிமைகள் பறிக்கப்படும் போது யாருக்கும் அஞ்சாமல் குரல்கொடுத்தும், சிறுபாண்மையினரின் நலன் சார்ந்த பிரச்சனைகளை தொடர்ந்து விவாதித்தும் வந்தவர்.
பாதிக்கப்பட்டவர்களின் வழக்கு நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் துணிந்து வாதாடி, அதில் பெரும்பாலும் வெற்றிபெற்றுத் தந்த அஸ்மா, பணத்தை எதிர்பார்த்திடாதவர். இதுகுறித்து அஸ்மாவின் உதவியாளராக நான்கு தசாப்தங்கள் பணியாற்றிய சவுத்ரி அக்தர் அலி, ‘அஸ்மா தன் வாழ்நாளில் எதிர்கொண்ட பாதிக்கும் மேலான வழக்குகளில், அவர் எந்தக் கட்டணமும் வசூலித்ததில்லை. அதேசமயம், இதை வெளியில் பெருமையாகவும் சொல்லிக்கொள்ள விரும்பாதவர்’ என புகழாரம் சூட்டுகிறார்.
தொடர்ந்து அவர், ‘ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண் அஸ்மாவின் அலுவலகத்திற்கு வந்தார். தனது மகனை தன் கணவர் கடத்திவிட்டதாகவும், அவரிடமிருந்து தன் மகனை மீட்டுத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்த அஸ்மா அதில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ஜப்பான் பெண்ணிடம் போதுமான பணம் இல்லை. எனவே, தன் சொந்தப் பணம் 14 லட்ச ரூபாயை செலவழித்து ஷ்யூரிட்டி பத்திரத்தை அந்தப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்தவர் அஸ்மா’ என நினைவுகூருகிறார்.
பாகிஸ்தானில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த ஜியா உல் ஹக் காலத்தில் ராணுவத்தை எதிர்த்ததற்காக 1983ஆம் ஆண்டு சிறைவாசம் சென்றவர் அஸ்மா. தொடர்ந்து ராணுவ நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர், அரசால் நாடுகடத்தப்பட்டவர்களை மீட்கவும் நீதிமன்றங்களில் வாதிட்டார். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற பார் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர் அஸ்மா.
தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வந்த அஸ்மா, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவனர்களுள் ஒருவராவார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான அஸ்மா, நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மகள் முனிஜே ஜகாங்கீர் தெரிவித்திருக்கிறார்.
ஒப்பற்ற மனித உரிமைப் போராளியான அஸ்மா ஜகாங்கீரின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன், ‘குரலற்றவர்களின் குரலாக வாழ்ந்த, ஒழுக்கத்துக்கும், தைரியத்துக்கும் பேர்போன அஸ்மா ஜகாங்கீரை இன்று பாகிஸ்தான் இழந்திருக்கிறது’ என வருத்தம் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் நிசப்தம் அடைந்திருக்கிறது. அணையா தீபமாக மிளிர்கிறார் அஸ்மா.
ராணுவத்துக்கு ஆறு மாசம்!
ஆர்.எஸ்.எஸ்.க்கு மூணே நாள்! - மோகன் பாகவத்
போர் வந்தால் இந்திய ராணுவத்துக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். தயாராகி விடும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘இந்தியா ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் பட்சத்தில், அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுத்தால், ஆர்.எஸ்.எஸ். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும். இந்திய ராணுவம் போருக்குத் தயாராக ஆறேழு மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ராணுவமாக ஒன்றுகூட மூன்றே நாட்கள் போதும்’ என பேசியுள்ளார். மேலும், ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு குடும்ப அமைப்பாக செயல்பட்டாலும், ராணுவத்திற்கு இணையான ஒழுக்கத்துடனும், ஆயத்த நிலையுடனும் இருக்கிறது. தேசம் பிரச்சனையைச் சந்திக்கும்போது உயிரையும் விடுவதற்கு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். இந்தியா இந்து தேசமாகும்போது அதில் ஆர்.எஸ்.எஸ்.க்கான தேவை இருக்காது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொருடனும் நண்பர்களாக அப்போது பழகிக் கொண்டிருப்பார்கள்’ என பேசியுள்ளார்.
மோகன் பாகவத்தின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிருத்யுன்ஜே திவாரி, ‘இந்திய ராணுவம் அதன் ஒப்பற்ற தியாகங்களால் மிகப்பெரிய பெருமைகளைக் கொண்ட நிறுவனம். அதோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது’ என தெரிவித்துள்ளார்.
ஜெ. பரிசு தொகை வழக்கை சிபிஐ திரும்ப பெற்றது
ஜெயலலிதா மிதமான பரிசு தொகை வழக்கை சிபிஐ திரும்ப பெற்றது.
1991ஆம் ஆண்டு 3லட்ச அமெரிக்க டாலர்களை ஜெ பரிசு பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்து. இந்த நிலையில் சிபிஐ வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி ரமணா வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்தார்.