Published on 09/10/2020 | Edited on 09/10/2020
![cyclone india meteorological department](http://image.nakkheeran.in/cdn/farfuture/e2iXfgp3w9APGt-STWBHS0abgwOlSh2gLHdPE0e-TFw/1602219888/sites/default/files/inline-images/india_9.jpg)
அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.