Skip to main content

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Chance of rain in 14 districts of Tamil Nadu

 

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கடலூர், இராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்